உலகிலேயே மிக நீளமான கார் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 100 அடிக்கு மேல் நீளம் கொண்ட ஒரு ஆடம்பரக் கார் காட்டப்பட்டுள்ளது. இந்த கார், தனது தனித்துவமான அம்சங்களுக்காக கின்னஸ் உலக சாதனைப் (Guinness World Record) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்தச் சாதனை கார், 24 சக்கரங்களையும் கொண்டுள்ளது. இதன் மிக முக்கியமானச் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் கூரையின் மீது ஒரு ஹெலிகாப்டரை (Helicopter) பார்க் செய்யும் வசதி (ஹெலிபேட்) உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Benjamin Battles (@battles.digital)

அதுமட்டுமின்றி, இந்தக் காரில் ஆறு பேர் அமரும் வகையிலான ஜக்குஸி (Jacuzzi) நீச்சல் தொட்டி மற்றும் ஒரு கோல்ஃப் டி (Golf Tee) ஆகியவையும் உள்ளன. இந்தக் கார் தற்போது புளோரிடாவின் ஆர்லாண்டோ ஆட்டோ அருங்காட்சியகத்தில் (Orlando Auto Museum) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.