பொதுவாக, பைக்குகள் நிலப்பரப்பில் மட்டுமே ஓடும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வினோதக் காணொளி வைரலாகி வருகிறது.
அதில், ஒரு நபர் ஆற்றில் தண்ணீரின் மேல் பைக்கை மின்னல் வேகத்தில் ஓட்டிச் செல்கிறார். ஆற்றின் கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில், அந்தப் பைக் தண்ணீரின் மேற்பரப்பில் ஓட்டிச் செல்வதும், அதன் வேகம் சற்றும் குறையாததும், பைக் உள்ளே மூழ்காததும் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த 17 வினாடி காணொளியைக் கண்ட ஆயிரக்கணக்கானோர், ‘இது எப்படி சாத்தியம்?’ என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
यह कौन सी बाइक है जो पानी पर दौड़ रही है😯
और यह पॉसिबल कैसे हुआ समझ नहीं आया मेरे pic.twitter.com/30FaD71sOw
— JUBER KHAN (@KhanJuber00) November 10, 2025
“>
இந்தக் காணொளியைக் கண்ட பலரும், இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும், ஒரு பயனர் இது குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளார். தண்ணீரின் மேல் ஓடும் இந்த பைக், ‘ஹைட்ரோஃபாயில் பைக்’ அல்லது ‘வாட்டர் பைக்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் கீழே சிறிய இறக்கைகள் (Wings) பொருத்தப்பட்டிருக்கும் என்றும், பைக் வேகம் எடுக்கும்போது அந்த இறக்கைகள் தண்ணீரை வெட்டி, பைக்கை மேற்பரப்பில் தூக்கி நிறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பைக் தண்ணீரின் மேல் ஓடுவது போலத் தெரிவதாகவும், இது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் பைக் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
