கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் விளைவாக, சென்னையில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மழையால் அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை (நவம்பர் 01) சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, நாளை (நவ. 01) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்டக் கல்வி அலுவலர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சென்னை பள்ளி மாணவர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
