ராஜஸ்தான் மாநிலத்தில், பிரத்யுமன் தீக்ஷித் என்ற அரசு அதிகாரி, தனது மனைவி பூனம் தீக்ஷித்தின் பெயரில் இரண்டு தனியார் நிறுவனங்களான ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாப்ட்வேர் லிமிடெட் ஆகியவற்றில் போலியாக வேலை செய்வது போல் காட்டி, 37.54 லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்த நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களைப் பெற்றவை. பூனம் தீக்ஷித் ஒரு நாள் கூட அலுவலகத்திற்குச் செல்லவில்லை என்றாலும், அவரது கணவர் பிரத்யுமன், போலி வருகைப் பதிவுகளை அனுமதித்து இந்த மோசடியைச் செய்தார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையில் தான் பூனம் தீக்ஷித் இரு நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்று வந்தது தெரியவந்தது. இந்த காலகட்டத்தில், அந்த நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களையும் பெற்றிருந்தது தெரிய வந்தது.
