டெல்லி நகரில் நகைக் கடையில் நடந்த அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் இரண்டு பெண்கள் வாடிக்கையாளர்களாக வந்துள்ளனர். நகைகளை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த பெண் கடைக்காரர் ஒரு கணம் திரும்பிப் பார்த்தவுடன், அந்த இரண்டு பெண்களும் வாய்ப்பை பயன்படுத்தி புத்திசாலித்தனமாக மோசடி செய்தனர்.

 

அவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உண்மையான தங்க மோதிரத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் போலியான மோதிரத்தை அங்கு வைத்து  மாற்றியுள்ளனர். இதையெல்லாம் கடையின் சிசிடிவி கேமரா தெளிவாக பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. “திருடர்கள் கூட புதிய நுட்பங்களை கையாளுகிறார்கள். உண்மையான மோதிரத்துக்குப் பதிலாக போலி மோதிரம் வைக்கப்பட்டது, ஆனால் சிசிடிவி அனைத்தையும் பதிவு செய்தது,” என்று ‘@mktyaggi’ என்ற பயனர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.