மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிகள் அரசு மதுபானக் கடையில் மதுவாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், மண்ட்லா மாவட்டம் நைன்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் பள்ளி சீருடையில் வந்த மாணவிகள் எவ்வித தடையும் இல்லாமல் மதுபானம் வாங்குவது பதிவாகியுள்ளது. அதிலும், கடைக்காரர் எந்தவித கேள்வியுமின்றி அவர்களுக்கு மதுவை வழங்கியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.
சம்பவம் தொடர்பாக துணை கலெக்டர், தாசில்தார், மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் வீடியோவை ஆய்வு செய்த அதிகாரிகள், விற்பனையாளர் மாணவிகளுக்கு மதுபானம் வழங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இது மதுபான உரிமம் நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிமுறைகளை மீறுவதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து கலால் துறை விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விற்பனையாளர் மீது மதுபானச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என கலால் துறை பரிசீலித்து வருகிறது. அதேசமயம்,
மேலும் அந்த மாணவிகள் உண்மையில் மதுவை அருந்தியார்களா? அல்லது வேறு யாருக்காவது வாங்கிச் சென்றார்களா?” என்பதையும் விசாரணை குழு ஆராய்ந்து வருகிறது.
