ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இந்தியா அணியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியதை வைத்து கேலி செய்த பாகிஸ்தான் வீரர்கள், தற்போது அதே வண்ணம் 7-0 என்ற வெற்றியில்லா தொடருடன் வெறுமனே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் 7 போட்டிகளில் 3 மழையால் கைவிடப்பட்டன. மீதமுள்ள 4 போட்டிகளில் முற்றிலும் தோல்வியடைந்ததால், இப்போது அந்த அணிக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி வெள்ளிக்கிழமை  நடைபெற இருந்த நிலையில், தொடக்கத்திலேயே 4.2 ஓவர்களுக்கு பிறகு மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

“>

 

இதனால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன. தொடர்ந்து தோல்விகள், புன்னகையில்லா முகங்கள் மற்றும் நம்பிக்கையிழந்த ரசிகர்கள் ஆகியவற்றின் நடுவே, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தனது வேதனையை வெளிப்படுத்தினார். “நாங்கள் நான்கு ஆண்டுகளாக இந்த உலகக் கோப்பைக்காக காத்திருந்தோம். ஆனால் வானிலை மட்டுமே எங்களுக்கு எதிராக இருந்தது,” என்று அவர் கூறினார்.

“>

 

மேலும் அவர், “நாங்கள் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் பின்னடைந்துவிட்டோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நெருக்கமான போட்டிகள் ஆடினோம். ஆனால் அதில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஒரு இளைய கேப்டனாக, இந்த உலகக் கோப்பை எனக்கு நல்ல பாடமாக அமைந்தது. வரவிருக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

தோல்வி அடைந்த அணியையே வழிநடத்த வேண்டிய சூழ்நிலையில், நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்” என தெரிவித்தார். அவரது இந்த மனம் திறந்த பேச்சு, விளையாட்டு உணர்வுக்கும், அணியின் எதிர்காலத்திற்கு உரிய திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டுகிறது