சென்னை நகரின் மழை மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் ஒருவர், “சென்னை நகரம் இப்போது 20 சென்டிமீட்டர் அளவில் ஒரே நாளில் பெய்யும் மழையையும் தாங்கக்கூடிய கட்டமைப்புடன் உள்ளது” என பெருமையாக கூறியிருந்தார்.

ஆனால் சமீபத்தில் சில மணி நேர மழையிலேயே சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கி, மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதால், அந்த வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அந்த பழைய உரை மற்றும் தற்போதைய வெள்ள நிலைமையை ஒப்பிட்டு கிண்டலாக எடிட் செய்யப்பட்ட வீடியோவை அதிமுகவின் ஐடி விங் பிரிவு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

“>

 

“ஆண்டுதோறும் வசனம் மாறவில்லை, காட்சியும் மாறவில்லை” என சொல்லப்படும் அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.