சாலையில் வேகமாக சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிவைடரை மோதி எதிர்புறத்தில் இருந்த பொதுமக்கள் மீது பாய்ந்தது. சம்பவம் நிகழ்ந்த போது அங்கு பலர் பேசிக்கொண்டு இருந்தனர். லாரி டிவைடரின் ரெயிலிங் பகுதியை உடைத்து நேராக கடைகள் நோக்கி பாய்ந்தது. அதனால் அங்கிருந்தவர்கள் உயிர் தப்பும் நோக்கில் பரபரப்பாக ஓடினர்.
वीडियो देखने के बाद आप किसको दोष देंगे । अपनी राय कमेंट बॉक्स में जरूर बताए!!!😲👇 pic.twitter.com/ivOeLwVgK0
— Sandeep Choudhary (@ChoudhriSandy) October 18, 2025
“>
பயங்கரமான அந்த லாரி பல பைக்குகளை மோதியதுடன், கடைகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. வேகமாக சென்ற லாரியின் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்கு அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்
