கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு தொடர்பான வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கில், விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் ஏற்பாடு செய்தது குறித்து நீதிபதிகள் விஜயை கடுமையாக விமரித்தனர். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “விஜய் என்ன தவறு செய்தார்? கூட்டம் என்பது மக்களின் ஆதரவைப் பிரதிபலிக்கிறது. எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்த்தனர். அது குற்றமா? அதுபோலவே, விஜய் வரும் வழியில் கூட்ட நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இதை அரசியல் விமர்சனமாக மாற்றுவது முறையல்ல” என தெரிவித்துள்ளார்.