திருவாரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்களை எதிர்நோக்கி உரையாற்றினார்.

“கேள்வி கேட்பது மட்டுமல்ல, தீர்வை நோக்கி செல்லவே தான் தவெக-வின் நோக்கம். தேர்தல் அறிக்கையில், நம்மால் செய்யக்கூடியதை மட்டுமே எழுதுவோம். பொய்யான வாக்குறுதிகள் இல்லை, நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் மட்டுமே கூறுவோம்” என்று வலியுறுத்தினார்.

மேலும், ஏழ்மை இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத ஆட்சி, குடும்ப ஆதிக்கம் இல்லாத நிர்வாகம், உண்மையான மக்களாட்சி என்பது தான் தவெக கட்சியின் மிஷன் எனவும் அவர் கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by 𝗧𝗮𝗺𝗶𝗹𝗮𝗴𝗮 𝗩𝗲𝘁𝘁𝗿𝗶 𝗞𝗮𝘇𝗵𝗮𝗴𝗮𝗺 (@tvk_vijay)

“>

அதே நேரத்தில், பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை நேரடியாக வாசிப்பது போல் விஜய், “இது வெறும் கூட்டம்தான்… ஓட்டுப் போட மாட்டாங்க என சொல்வதுண்டு. அது உண்மையா?” என கேள்வி எழுப்ப, உடனே கூட்டத்தில் இருந்த தொண்டர்கள், “அப்படி இல்லை” என TVK… TVK… என ஆர்ப்பரித்து பதிலளித்தனர்.

இதற்கு பதிலளித்த விஜய், “இது சும்மா கூட்டமா? நீங்கள் சொல்றது தான் உண்மை. கோடான கோடி நன்றி” என உருக்கமான பதிலை வழங்கினார். அவரது உரை, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.