நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானை விமர்சித்து, நடிகை விஜயலட்சுமி மீண்டும்  வீடியோவொன்றை வெளியிட்டு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த வீடியோவில், “நல்ல குடும்பம்  நடத்திவிட்டு, என்னை தவறாக பயன்படுத்திவிட்டு, பின்னர் எனக்குத் தெரியாது என மறுக்கிறார். என்னை எதிர்த்து சிலரை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாக சொல்லி 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களைப் பச்சை பொய்களால் ஏமாற்றியவர் யார்?” எனக் கேட்டுள்ளார்.

மேலும், 2023ஆம் ஆண்டு சீமான் தன்னிடம் ஒரு சமரசம் அடிப்படையிலான உடன்பாடை (டீல்) பேச முயன்றதாகவும், “திமுகவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ எதுவும் பேசாமல் இருக்க வேண்டும். மாதம் ரூ.50,000 கொடுக்கிறேன். சென்னை பக்கம் வராதே” என கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் பேசிய  வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அப்போதுதான் வழக்கை ரத்து செய்ய முடியும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.