பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிறு வயது நண்பர் அப்பாஸ் குறித்து வெளியாகிய தகவல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குஜராத்தின் வாட் நகரை சேர்ந்த மோடியின் குடும்பத்தில், அவரது தந்தையின் நண்பர் மியான் பாயின் மரணத்துக்குப் பிறகு, அந்த குடும்பத்தில் ஏற்பட்ட ஏழ்மை காரணமாக அப்பாஸ் என்பவரை மோடியின் தந்தை வீட்டுக்கு அழைத்து வந்து வளர்த்துள்ளார்.

அப்பாஸ், மோடி மற்றும் அவரது சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வளர்ந்தார். இஸ்லாமிய பண்டிகைகளில் பிரதமரின் தாயார் ஹீராபென், அப்பாஸுக்காக சிறப்பு உணவுகளை சமைத்து கொடுத்த நெகிழ்ச்சி தரும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. அப்பாஸ் மற்றும் பங்கஜ் மோடி ஒரே வகுப்பில் படித்து, பின்னர் இருவரும் அரசு பணியில் சேர்ந்தனர். தற்போது ஓய்வு பெற்ற அப்பாஸ் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறார்.

“மோடியின் குடும்பம் எனக்கு தந்தை, தாய் போன்றது. அவர்கள் இல்லையென்றால் என் வாழ்க்கை இவ்வளவு உயர்ந்திருக்காது” என்று கூறிய அப்பாஸின் உணர்ச்சிப் பேச்சு, பிரதமரின் குடும்பத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தையும், மனிதநேயத்தை விளக்குவதாக உள்ளது.