இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் அண்ணா பிறந்தநாள் ஒட்டி தி-நகரில் நடைபெற்ற மீட்டிங்கில் எடப்பாடி பழனிச்சாமி வீர வசனம் பேசினார். நான் தன்மானமிக்கவர். எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் முக்கியம் இல்லை. வெற்றி, தோல்வியும் முக்கியமில்லை.

தன்மானம் தான் முக்கியம் என்று பேசினார். ஆனால் அவர் தற்போது செய்து வரும் எழுச்சி பயணத்தை தள்ளி வைத்துவிட்டு டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு முகத்தை மூடியபடி வெளியே வரவேண்டிய அவசியம் என்ன?. எழுச்சி பயணத்தை தள்ளி வைப்பதற்கு மழையை காரணமாக கூறியிருந்தார். பொய் சொல்லி யாரை ஏமாற்ற பார்க்கிறார் எடப்பாடி?.

இபிஎஸ் இடம் தமிழ்நாடு மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். வருகிற 2026 தேர்தலில் இபிஎஸ் தோல்வியை தழுவுவது உறுதி என்று அவர் உறுதிப்பட கூறினார். மேலும் இன்று முதல் எடப்பாடி பழனிச்சாமி முகமூடியார் பழனிச்சாமி என்று அழைக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.