நாளை ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணி நேரம் பக்தர்களுக்கான தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (செப். 7) மாலை 3.30 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது.

மேலும், கிரகணம் முடிந்ததும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படும் எனவும், நாளை மறுநாள் காலை 6 மணிக்குப் பிறகு மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை திருப்பதியில் தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளனர்.