அமெரிக்காவின் புளோரிடா மாநில பினெல்லாஸ் கவுண்டியில், உரிய கல்வித்தகுதி மற்றும் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே பல் சிகிச்சை செய்து வந்த எமிலி மார்டினெஸ் என்ற 35 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“வெனீர் டெக்னீஷியன்” என சமூக ஊடகங்களில் தன்னை விளம்பரப்படுத்திய இவர், “டாப் இன் பியூட்டி பார்” என்ற கடையின் வழியாக வாடிக்கையாளர்களுக்கு புன்னகை மாற்ற சிகிச்சை அளிப்பதாகக் கூறி, வெனீர் பல்லுகளைப் பொருத்தியுள்ளார்.
ஆனால் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட விஷயங்களில் மிக ஆபத்தான கிரேஸி பசை இருப்பதாகவும், இதனால் பலருக்கு தொற்றுகள் ஏற்பட்டு பற்கள் சேதமடைந்துள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
தகுதியற்ற ஒருவரிடம் பல் சிகிச்சை பெற்றதைக் கேட்ட அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவர் தனது முழு வாய்க்கும் வெனீர் சிகிச்சைக்காக $2,500 செலுத்தியுள்ளதாகத் தெரியவந்தது.
NEW: Florida woman arrested for unlicensed dental work used ‘crazy glue’ on victims’ teeth
According to investigators, Emely Martinez used crazy glue to attach fake veneers
This isn’t the first time she’s been arrested for the same crime. She was also arrested in Hillsborough… pic.twitter.com/GOXqW9nZPa
— Unlimited L’s (@unlimited_ls) August 25, 2025
“>
இச்சம்பவம் மார்டினெஸுக்கு முதல் முறை அல்ல என்றும், கடந்த மார்ச் மாதம் ஹில்ஸ்பரோ கவுண்டியிலும் இதேபோல் உரிமம் இல்லாமல் பல் சிகிச்சை செய்ததாகக் கைது செய்யப்பட்டு பின் விடுதலையடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, போலீசார் விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ துறையில் உரிய தகுதி இல்லாத நபர்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் பொதுமக்கள் நலனுக்கு பெரும் அபாயம் என்பதையும் இச்சம்பவம் புலப்படுத்தியுள்ளது.
