விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி விமர்சையாக நடந்து முடிந்தது. சமீபத்தில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது அவர் கூறியதாவது, விஜய் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. நல்லா இருந்தது மாநாடு. ரெஸ்பான்ஸ் நல்லா இருந்தது. நல்ல கூட்டம். என்னோட ஆசிர்வாதம் எப்பவுமே இருக்கும் என கூறியுள்ளார்.
