கர்நாடக மாநிலம் மங்களூர் சேர்ந்தவர் ரெமோ எவட். இவர் தொடர்ந்து 178 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்த நிலையில் கேரள மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த விதுசி தீக்ஷா என்ற இளம் பெண் சுமார் 216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி ரெமோ எவட்டின் சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் 3.30 மணிக்கு பரதநாட்டியம் ஆடத் தொடங்கிய விதுசி தீக்ஷா வருகிற 30-ஆம் தேதி வரை சுமார் 216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி முடிப்பார் என சொல்லப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால் ரெமோ எவட் சாதனை முறியடிக்கப்படும். மேலும் கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் விதுசி தீக்ஷா இடம் பிடிப்பார்.
