இத்தாலியின் மிலன் மல்பென்சா சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெர்மினல் – 1 பகுதியில் திடீரென ஒருவர் வன்முறையில் ஈடுபட்டார். அவர் சுத்தியலால் செக்-இன் கவுண்டர்களின் மேசைகள், தகவல் திரைகள் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார். பின்னர் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்ததால், புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் பயணிகள் பீதியுடன் ஓடிச் ஓடினர்.
உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் எல்லை காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த நபரை கட்டுப்படுத்தி கைது செய்தனர். அவரிடம் இருந்த சுத்தியல் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவத்தில் ஒரு ஊழியர் சிறிய காயம் அடைந்தார்.
🚨🇮🇹 Meanwhile at Malpensa Airport, Milan Italy
Usual suspect is apprehended after smashing parts of Airport Terminal up with a Hammer & then setting fire to it. pic.twitter.com/LQ8UDZN6i9
— Concerned Citizen (@BGatesIsaPyscho) August 20, 2025
“>
சந்தேக நபரின் அடையாளம் மற்றும் காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும், டெர்மினலின் சில பகுதிகள் மூடப்பட்டதால் விமான சேவைகள் தாமதமாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Un matto ha dato fuoco alla zona check in isola 4 di #Malpensa T1. Metà zona check in è chiusa in attesa che si possa ripristinare l’operatività in sicurezza.
Nel parliamo QUI SUL FORUM https://t.co/KETrbU0Q7Y#emergenza #milano #incendio #aeroporto pic.twitter.com/3BqcUSXP3M
— Associazione Aeroporti Lombardi ✈️ (@aptlombardi) August 20, 2025
“>
