பல்கேரியா ஆன்மீகவாதி பாபா வாங்க கண் பார்வையற்ற பாபா வாங்க 1911 ஆம் ஆண்டு பிறந்தவர் .இவர் எதிர்காலத்தை கணித்து சொல்லி பிரபலமானவர். இவரது கணிப்பு பல நேரங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. 1996 ஆம் ஆண்டு உயிரிழந்த பாபா வாங்க எதிர்காலத்தைப் பற்றிய பல நிகழ்வுகளை கணித்து வைத்துள்ளார்.
உதாரணமாக 1980 ஆம் ஆண்டு ரஷ்யாவின் குக் நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் என பாபா வாங்க கணித்தார். அவர் கணித்தது போல 2000 ஆம் ஆண்டு ரஷ்யா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி 118 பேர் உயிரிழந்தனர். டயானாவின் மரணம் சீனாவின் வளர்ச்சி பற்றியும் பாபா வாங்க முன்கூட்டியே கணித்து கூறினார்.
2046 ஆம் ஆண்டு செயற்கை உறுப்புகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என கணித்துள்ளார். தற்போது ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் என்ன நடக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
மேஷ ராசி
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தைரியமும் உறுதியும் உள்ளவர்கள். இதன் மூலம் அவர்கள் விரும்பிய இலக்குகளை அடைய முடியும். நல்ல முதலீடு தேர்வுகளை செய்வது தொழில் மாற்றம் செய்வது, புதிய தொழில் தொடங்குவது, வரும் மாதங்களில் மேஷ ராசிக்கு கணிசமான நிதி வளர்ச்சியை வழங்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் நிலையாக இருப்பதால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்கள் தங்களது நற்பெயரை உயர்த்திக்கொண்டு கடின உழைப்பின் மூலம் நன்மைகளை பெறலாம்.
மிதுனம் ராசி
மிதுன ராசிக்காரர்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதில் சிறந்த விளங்குவார்கள். வரவிருக்கும் மாதங்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு பலன் கொடுக்கும். எதிர்பாராத விதமாக வெற்றியும் கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர் சூரியன் ஆளும் கிரகமாக இருப்பதால் அவர்கள் வரும் மாதங்களில் புதிய நிறுவனத்தை தொடங்குவார்கள். அவர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்திக்கலாம். இலக்கை நிர்ணயித்தால் விரைவில் அடுத்த சில மாதங்களுக்குள் நிதி ஆதாயம் மூலம் கோடீஸ்வரராக மாறலாம். பாபா வாங்கா இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பணக்கார வாழ்க்கை கிடைக்கும் என கணித்துள்ளனர்.
