மும்பை நகரம், புறநகர் பகுதிகள், தானே, பால்கர், கல்யாண் ஆகிய இடங்கள் கடந்த இரண்டு நாட்களாக கனமழையால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிலர் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கோர, சிலர் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளைக் கடந்து அலுவலகங்களை எட்டிய துயரத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இதேசமயம், சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மீம்களால் வெடித்து, மழை நிலைமையை நகைச்சுவையாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

“>

 

“மும்பையில் உபர்/ஓலா படகு சேவையை தொடங்குமா?” என நகைச்சுவையுடன் கேலி செய்கின்றனர். மேலும், ஒரு AI வீடியோவில் பயணி உபர் முன்பதிவு செய்தால், ஓட்டுநர் படகோடு வந்து சேருவார் என காட்சியளிப்பது வைரலாகி வருகிறது.

“>

 

அதேபோல், “என் செருப்பு பாந்த்ராவை நோக்கி மிதந்து செல்கிறது, யாராவது பார்த்தால் திருப்பி அனுப்புங்கள்” என ஒருவர் பதிவு செய்த புகைப்படமும் பரவலாக பகிரப்படுகிறது.

“>

 

வெள்ளத்தில் மூழ்கிய மும்பை சாலைகள் நெட்டிசன்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும், அதனை மீம்களாக மாற்றி சிரிப்பை பகிர்ந்து கொள்கின்றனர்.

“>

“>