திருமண மேடையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மணமகனின் முகத்தில் ஷாம்பெயின் ஊற்றியவருக்கு, மணமகள் திடீரென காட்டிய புத்திசாலித்தனமான எதிர்வினை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த காட்சி இணையத்தில் பரவி, “மணமகள் தனது கணவருக்காக எப்போதும் கேடயமாக நிற்பார்” என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், மணமகனும் மணமகளும் மேடையில் நின்று விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் வேண்டுமென்றே மணமகனின் முகத்தில் ஷாம்பெயின் ஊற்றத் தொடங்கினார். துளிகள் கண்களில் விழத் தொடங்கிய நிலையில், அருகில் நின்ற மணமகள் பதற்றமடையாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தனது கையில் இருந்த பூங்கொத்தை அந்த ஆணின் முகத்தில் கோபத்துடன் எறிந்தார். மணமகளின் தைரியமான நடவடிக்கை அந்த நொடியே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
View this post on Instagram
“>
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @elite.brains என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. “மணமகள் விசுவாசத்தை காட்ட சத்தியப்பிரமாணத்திற்கு காத்திருக்கவில்லை… பூங்கொத்தை கேடயமாகப் பயன்படுத்தினார்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வீடியோ வேகமாக வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது.
நெட்டிசன்கள் கருத்துப் பகுதியில், “அவளுடைய கண்களில் சண்டையிடத் தயாரான சக்தி தெரிகிறது”, “மணமகள் சரியானதைச் செய்தார்” என்று பாராட்டியுள்ளனர். இன்னொருவர், “இந்த மணமகள் எப்போதும் தனது கணவருக்கு கேடயமாக இருப்பார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
