நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குகள் திருடப்பட்டதாக கடந்த வாரம் குற்றம் இருந்த நிலையில் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் 25 கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் தேர்தல் ஆணைய வளாகத்திற்குள் நுழையை எதிர்க்கட்சி எம்பிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நிலைமையை சமாளிக்க போலீசார் எம்பிக்கள் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
#WATCH | Lok Sabha LoP Rahul Gandhi and others help TMC MP Mitali Bagh, who fainted during the opposition protest and the resulting detention by the police. pic.twitter.com/5Rpw67O8P2
— ANI (@ANI) August 11, 2025
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் கைது செய்து பேருந்தில் ஏற்ற முயன்றனர். அப்போது புழுக்கம் அதிகமாக இருந்ததால் பெண் எம்பிக்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதில் காங்கிரஸ் எம்பி மிதாலி பாக் என்பவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த ராகுல் காந்தி உடனடியாக மித்தாலி பாக்கே பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
