வீட்டில் அண்ணனும் தம்பியும் தனியாக இருக்கும்போது, தம்பி துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்தான். அண்ணனோ அமைதியாக ஒரு மூலையில் அவனுக்குப் பிடித்த விளையாட்டில் மூழ்கியிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக தம்பியின் தொண்டையில் மிட்டாய் ஒன்று சிக்கிக் கொண்டது.
மூச்சு விட முடியாமல் தரையில் சுருண்டு விழுந்த தம்பியைக் கண்டு அண்ணன் அதிர்ச்சியடைந்தான். உடனடியாக அவனைக் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டான்; வயிற்றை அழுத்தினான், கால்களை உயர்த்தினான், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.
ஆனால், நல்வாய்ப்பாக அவர்கள் வீட்டில் தொண்டையில் சிக்கிய பொருளை அகற்றும் ஒரு கருவி இருந்தது. அண்ணன் அதை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, தம்பியின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை வெளியே எடுத்து அவனது உயிரைக் காப்பாற்றினான்.
View this post on Instagram
“>
இந்த நிகழ்வு ஒரு வீடியோவாகப் பதிவாகி, பலரது கவனத்தை ஈர்த்தது. இதைப் பார்த்த பலரும், இப்படியான ஒரு கருவி ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அவசர காலங்களில் உயிரைக் காக்கும் இத்தகைய கருவிகள், குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவசியமானவை என்பது பலரது ஒருமித்த கருத்து. இந்நிகழ்வு, வீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும், அவற்றை சரியாகப் பயன்படுத்துவதற்கு விழிப்புணர்வு தேவை என்பதையும் வலியுறுத்துகிறது.
