உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மேக வெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் உருவானது. இந்த வெள்ளத்தில் சிக்கி, சுமார் 50 பேர் வரை காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, மலையடிவாரத்தில் அமைந்திருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 11 ராணுவ வீரர்கள் காணாமல்போனுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நிலைமை குறித்த ராணுவத்தினரும், மாநில பேரிடர் மேலாண்மைத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
