சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சம்தா காலனியில், இரண்டு காளைகள் வலுக்கும் வன்முறையுடன் சண்டையிட்டு வந்த போது, அந்த வழியாக ஸ்கூட்டியில் சென்ற ஒரு பெண் தற்செயலாக சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீடியோவில், அந்த பெண் சண்டைபோடும் காளைகளை பார்த்ததும், ஸ்கூட்டியை திருப்ப முயற்சிக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by A N K I T (@iamankit.____)

ஆனால் அந்த தருணத்தில் ஒரு காளை திடீரென மோதிய பிறகு, மற்றொரு காளை நேராக அந்த பெண்ணின் மேல் விழுந்து, அவர் சாலையில் ஸ்கூட்டியுடன் கீழே விழுகிறார்.

திடீர் தாக்குதலுக்குப்பின், அந்த பெண் துணிச்சலாக எழுந்து, தனது காயங்களை பார்த்துவிட்டு, மீண்டும் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுகிறார். இந்த வீடியோ, @iamankit.__ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, 74 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது. காணொளியை பார்த்த நெட்டிசன்கள், அந்த பெண்ணின் தைரியத்தையும் மன உறுதியையும் பாராட்டி வருகின்றனர்.

ஒரு பக்கம் மக்கள் அவளது தைரியத்தைக் கொண்டாடினாலும், மறுபக்கம் “இதுபோன்ற உயிர் ஆபத்தான சூழ்நிலைகளை நகராட்சி நிர்வாகம் ஏன் தவிர்க்கவில்லை?” என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. “அந்த பெண் தலை காயம் அடைந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்” என்று ஒருவர் கவலையுடன் எழுதியுள்ளார். இன்னொருவர், “வீடியோவில் சிரிக்க வைக்கும் தருணம்தான், ஆனால் அந்த பெண்ணுக்கு நடந்தது மிக மோசமானது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.