பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அதில் ஷோபா தேவி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
அவருக்கு லாலன் குமார் குப்தா என்ற கணவர் உள்ளார். மேலும் இவர்களுக்கு அஞ்சலி, அன்ஷ் என்ற இரு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று ஷோபா தேவி வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் பள்ளி விட்டு வந்த குழந்தைகளை தீவைத்து எரித்துள்ளனர்.
அந்தக் கொடூரமான சம்பவத்தில் இரண்டு குழந்தைகளுமே தீயில் பலியாகி உள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீட்டுக்குள் புகுந்து குழந்தைகளை தீவைத்துக் கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
