இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை தனது வாழ்நாளில் ஆய்ந்தும், அனுபவத்திலும் கற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணன் முத்துவன் (வயது 85) காலமானார். கேரளாவின் மூணாறு அருகிலுள்ள வனப்பகுதியில் வேரூன்றிய முத்துவன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், அந்தச் சமூகத்தின் மூத்த உறுப்பினராக இருந்தார். வனங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாது, இயற்கையை ஆர்வத்துடன் ஆய்வு செய்து, அதன் சிறப்புகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் இவர் முக்கிய பங்காற்றினார். இரவிக்குளம் தேசிய பூங்கா உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
Krishnan Muthuvan, 85, revered as a living repository of forest knowledge passed away on Thursday. He was a resident of Lekkam Muthuvan tribal settlement in the Eravikulam National Park (ENP), Munnar.https://t.co/zag6idRd3P pic.twitter.com/DjPSdCgqLc
— The Hindu (@the_hindu) July 31, 2025
“>
வன வாழ்வியல், உயிரியல், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான அறிவு இவரிடம் நூல்களில் தேட முடியாத அளவில் இருந்தது. ‘வனமகன்’ என்று பலர் அழைத்த கிருஷ்ணன், பல்வேறு வனவிலங்குகள் மற்றும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான பண்டைய அறிவை தன் சமூகத்துடன் பகிர்ந்திருந்தார். தற்போது அவர் மறைந்த செய்தி வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் இழப்பாக கருதப்படுகிறது. அவரது இறப்புக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
