பாகிஸ்தானின் கராச்சி–பெஷாவர் இடையே இயக்கப்படும் ‘அவாம் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயிலின் உடைந்த நிலையைக் காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் உள்ளக காட்சி மனிதர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் காணப்படுகிறது.
ரயிலில் உள்ள இருக்கைகள் இல்லாமல், குப்பைகளால் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கிறார்கள்.
@RadioGenoaX என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது 97 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் பயணி ஒருவர் எடுத்துள்ள வீடியோவில், ரயிலின் கூரை, தரை ஆகியவை முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இது பாகிஸ்தான் ரயில்வே துறையின் மோசமான பராமரிப்பு நிலையை வெளிப்படுத்துகிறது.
Train in Pakistan 👀 pic.twitter.com/8LIz0U3zAm
— RadioGenoa (@RadioGenoa) July 29, 2025
இந்நிலையில், பல நெட்டிசன்கள் இதில் நக்கலாகவும், கவலையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர், “இது மனித கடத்தல் ரயிலா?” என கேள்வி எழுப்ப, மற்றொருவர் “பாகிஸ்தான் இன்னும் 1946-இல் வாழ்வது போல இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், @Incognito_qfs என்ற மற்றொரு பயனர், “இது அவர்களின் நவீன ரயில் என்றால், பழைய ரயில்கள் எப்படி இருக்கும்?” என கேலி செய்துள்ளார். இந்த வீடியோ, பாகிஸ்தான் போக்குவரத்து துறையில் நிலவும் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
