ஒடிசாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மயூர் பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேபாஷிஷ் பத்ரா. இவரது மனைவி சோனாலி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் வேட்டை விட்டு கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றார்.
கடத்த 12- ஆம் தேதி சோனாலியின் தாய் சுமதி, தனது மகள் சோனாலி பேரன் ஆகியோரை தேபாஷிஷ் வீட்டிற்கு சென்று சமரசம் செய்ய முயன்றார். அங்கு ஒரு வாரம் அவர்கள் தங்கி இருந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி தேபாஷிஷ் எனது மனைவி மற்றும் மாமியாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்து வீட்டிற்கு பின்புறம் இருக்கும் எலுமிச்சை தோட்டத்தில் இருவரது உடல்களையும் புதைத்தார்.
பின்னர் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த இடத்தில் வாழை கன்றுகளை நட்டு வைத்துள்ளார். இதற்கிடையே இருவரும் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தேபாஷிஷை பிடித்த விசாரித்த போது அவர் மனைவியும் மற்றும் மாமியாரை கொலை செய்தது ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவர் கூறிய இடத்திற்கு சென்று தோன்றி பார்த்தபோது சோனாலியும், அவரது தாய் சுமதியும் அழுகிய நிலையில் கிடந்தனர். இருவரது உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
