ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “ஹரிஹர வீரமல்லு” இப்படம் பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியாகி உள்ளது.

இப்படத்தின் மொத்த திரையரங்கு வியாபாரம் ரூபாய் 120 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 40 கோடியை கடந்துள்ளதாகவும் பவன் கல்யாண் படங்களில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படமாகவும் இப்படம் இடம்பெற்றுள்ளது.

வரும் ஒரே வாரத்தில் படம் லாபத்தை பெறும் என பட குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. தெலுங்கு மொழியை தவிர மற்ற மொழிகளில் எதிர்பார்த்த அளவு படம் வரவேற்பைப் பெறவில்லை என கூறப்படுகிறது.

இப்படம் முகலாய பேரரசை எதிர்த்துப் போராடிய முதல் இந்திய வீரரான மல்லு என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் விதமான வரலாற்று திரைப்படமாக படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.