தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் காமெடி நடிகராக சிறு வேடங்களில் நடித்து தற்போது நடிகராக மாறி உள்ளவர் ராஜூ ஜெக மோகன்.

இவர் பிக் பாஸ் சீசன் 5இல்  வெற்றி பெற்று பிரபலமானவர். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக “பன் பட்டர் ஜாம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை ரெய்ன்  ஆப் ரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆத்யா பிரசாத், பவ்யா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இன்றைய கால இளைஞர்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரிதாக எண்ணாமல் நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் திறனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 18ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம்  வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பன் பட்டர் ஜாம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.