90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கியவர் நெப்போலியன். நடிகராக மட்டுமின்றி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசில் அமைச்சராகவும் இருந்த அவர், தற்போதெல்லாம் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களால் இளைய தலைமுறையிடையே பிரபலமாகியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் ஐடி தொழில்துறையில் சிறந்து விளங்கும் நெப்போலியன், தன் குடும்பத்துடன் அங்கு செட்டில் ஆகியுள்ளார். இவரது மூத்த மகன் தனுஷூக்கு அறியவகை தசைச் சதைவு நோய் (Muscular Dystrophy) இருப்பதால், சிறந்த சிகிச்சை வசதிகளுக்காகவும், வாழ்க்கை தரத்துக்காகவும் சில ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் குடும்பமாக அமெரிக்கா செல்ல வேண்டியதாகியது.
View this post on Instagram
கடந்த ஆண்டு தனுஷுக்காக ஜப்பானில் பிரம்மாண்ட திருமணம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நெப்போலியன், தற்போது தன் மகனைப் பற்றிய ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில், பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், அமெரிக்கா சென்றபோது மரியாதை நிமித்தமாக நெப்போலியனின் வீட்டுக்கு சென்று தனுஷை சந்திக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், தனுஷின் தற்போதைய நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். “தனுஷுக்கு என்ன ஆச்சு..? உடல் மெலிந்து, ஆளே மாறி இருக்காரே!” என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், வீடியோவில் தனுஷின் மனைவி காணப்படாததைப் பார்த்த சிலர், “அவர் எங்கே?” எனவும் விசாரித்து வருகின்றனர்.
தனுஷ் விரைவில் உடல்நலமாகி, பழைய உற்சாகத்துடன் வாழ வாழ்த்தும் கருத்துக்களும் இந்த வீடியோவுக்குக் கீழ் பெருமளவில் பதிவாகி வருகின்றன. நடிகர் நெப்போலியனின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
