சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு சாலை விபத்து வீடியோ, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் நடுவே தவறி விழும் காட்சி பதிவாகியுள்ளது.

இதற்கான காரணம் பற்றி சமூக வலைதளங்களில் வாதங்கள் வெடிக்க, வீடியோவில் உள்ள சிறு விவரங்களை ஆராய்ந்த நெட்டிசன்கள் உண்மையான காரணத்தை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இவை ஓவர்டேக் செய்து விபத்தில் சிக்கியதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், வீடியோவில் சாலையின் நடுவே ஒரு பெரிய கல் இருப்பது தெளிவாக தெரிகிறது. இளம்பெண்கள் ஓவர்டேக் செய்யும் தருணத்தில் ஸ்கூட்டர் அந்த கல்லை தட்டியதால், அவர்கள் தவறி விழுந்தனர்.

இது ஒருபக்கம் சாலையில் உள்ள அக்கறையற்ற நிலையை வெளிக்கொணர்கிறது. இதனால் பெரிய விபத்து ஏற்படாமல் இருந்தது ஒரு அதிர்ஷ்டம். அந்த நேரத்தில் பின்னால் வந்த வாகன ஓட்டுநர் இந்த காட்சியை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள், “இதெல்லாம் ஓவர்டேக் காரணமல்ல… ஸ்கூட்டியின் சிறிய சக்கரங்கள் அந்த கல் மீது மோதியதால் விபத்து நேர்ந்தது” என கூறியுள்ளார்.