
புதுச்சேரி எம்எல்ஏ நேரு தற்போது தன்னுடைய எம்எல்ஏ பதிவையை ராஜினாமா செய்ததோடு அந்த கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கூட தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று 6 மணியளவில் எம்எல்ஏ நேரு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தன்னைப் போன்ற பிற எம்எல்ஏக்களும் மாநில அந்தஸ்துக்காக பதிவியை ராஜினமா செய்ய முன்வரவேண்டும் என்று கூறியுள்ளார்