உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் நவாபாபாத் பகுதியில் ஜூலை 5ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், ஒரு நபர் தனது ஸ்கூட்டரின் பின்னால் ஒரு நாயின் கால்களை கட்டி இழுத்துச் சென்றது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 19 விநாடிகள் நீளமான அந்த சிசிடிவி காட்சிகளில், அந்த நபர் நாயின் இரு பின்னக்கால்களை கயிறு மூலம் கட்டி ஸ்கூட்டரின் பின்புறத்தில் இணைத்திருப்பது தெரிகிறது. பிறகு அவர் வேகமாக ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு சென்றபோது, அந்த நாய் துடித்தபடியும், கத்திக்கொண்டே சாலையில் இழுக்கப்பட்டு சென்றதைக் காண முடிகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு, அந்த நாய் பலத்த காயங்களுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பஜரங் சௌக்கி பொறுப்பாளரான சந்த்பிரகாஷ் திரிபாதி கூறுகையில், “நாயை இழுத்துச் சென்ற நபர்மனநலம் சரியில்லாதவர். அவர் கூறுகையில், அந்த நாய் ஏற்கனவே இறந்து விட்டது. அதை அகற்றுவதற்காகவே இவ்வாறு இழுத்துச் சென்றதாக விளக்கம் அளித்துள்ளார்,” என தெரிவித்தார்.

இது தொடர்பாக ஒரு உள்ளூர் விலங்குயிர் பாதுகாப்பு அமைப்பினர், நவாபாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், விலங்கின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரிக்கும் நவாபாபாத் காவல் நிலையத் தலைவர் சந்தோஷ் அவஸ்தி கூறுகையில், “சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

விலங்கு மருத்துவர் டாக்டர் சத்யேந்திர சிங் கூறுகையில், “உடற்கூறு ஆய்வு முடிவுகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும்,” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் சமூகத்தில் விலங்குகளுக்கும் உரிமை இருக்கிறது என்ற விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது. கொடூரமாக நடந்துகொண்ட நபருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

 

नवाबाद थाना क्षेत्र के पिछोर का एक सनसनीखेज वीडियो सामने आया है। जिसमें एक शख्स अपनी स्कूटी से रस्सी के सहारे बेजुबानबान कुत्ते को बांधकर घसीटता लेजा रहा है। इस बेरहम शख्स के करतूत की पूरी तस्वीर वहां लगे सीसीटीवी कैमरे में कैद हो गई। जिसका वीडियो अब वायरल हो रहा है, pic.twitter.com/EFQSKgpcCj

— Abhi (journalist ) (@AbhiChaubeylive) July 7, 2025