கர்நாடக மாநில மைசூரில் கடந்த‌ 6-ம் தேதி நடந்த ஒரு விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த சாலையில் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் மிகவும் வேகமாக வந்தது.

அதிவேகமாக வந்து ஒரு உணவு டெலிவரி ஊழியரின் பைக்கின் மீது மோதியதில் அந்த ஊழியரும் மற்றொருவரும் பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதாவது zomoto ஊழியர் கார்த்திக் தன்னுடைய பைக்கில் சாலையோரம் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த நேரத்தில் சையத் சரூன் என்ற வாலிபர் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கில் வேகமாக வந்து கொண்டிருந்தார்.

இவர் கார்த்திக் பைக் மீது மோதியதில் அவர் பரிதாபமாக தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்த ஸ்போர்ட்ஸ் பைக்கும் வேகமாக சென்றதில் ஒரு மின் கம்பத்தின் மீது மோதியது. அப்போது பைக்கில் பெட்ரோல் கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சையத் பலத்த காயம் அடைந்தார்.

அவரை அங்கிருந்த மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு தற்போது வீடியோவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.