
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று (ஜூலை 9) 13 தொழிற்சங்கங்கள் ஒரே நேரத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் பின்னணியில், தமிழகத்திலும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் “பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது” என தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைகள் விளக்கம் வெளியிட்டுள்ளன. அதன்படி, “பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும். மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பமடைய தேவையில்லை” என கூறப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் . எஸ்.எஸ் சிவசங்கர், “அனைத்து மாநிலப் போக்குவரத்து கழகங்களின் பஸ்களும் வழக்கம்போல இயக்கப்படும்; வேலைநிறுத்தத்தால் சேவை பாதிக்கப்படாது” என உறுதியளித்துள்ளார். எனவே, மக்கள் யாரும் தவறான தகவலால் பாதிக்கப்பட வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.