
அமெரிக்காவின் தெற்கு பிலடெல்பியாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்று உள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் 3 பேர் பெரியவர்கள் என்றும், காயமடைந்தவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த துப்பாக்கிச் சூடுசம்பவம் கிரேஸ் பெர்ரியில் உள்ள ஒரு குடியிருப்பு தெருவில் அதிகாலை நடத்தப்பட்டது. நாங்களும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினோம். இதில் ஆயுதத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.