
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே முதல் மனைவியுடன் விஷ்ணுவுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில் இரண்டாவது மனைவி ஜுவாலா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தனது மகளின் பெயர் சூட்டு விழாவை விஷ்ணு விஷால் சமீபத்தில் நடத்தியுள்ளார். அதில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். மீரா என பெயர் வைத்திருக்கிறார்.
இதற்கு அர்த்தம் நிபந்தனை அற்ற அன்பு மற்றும் அமைதி என்பதுதான் ஆகும். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமீர்கான் கலந்து கொண்டது பற்றி நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.