தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இன்று பிரச்சாரத்தின் லோகா மற்றும் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

இந்த சுற்றுப்பயணம் திமுக ஆட்சியை அகற்றுவதற்காக தான். என்னுடைய பிரச்சார பயணத்தில் ஒரே நோக்கம் திமுக ஆட்சியின் கொடுமைகளை மக்களிடம் எடுத்து சொல்வது மட்டும் தான். நான் எப்போதும் மக்களுடன் பேசிக் கொண்டிருப்பவன்.

எப்போது மக்களை சந்தித்து நான் மக்களின் குரலாகவே இருக்கிறேன். பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்தது அதிமுக தான். என்னை விமர்சிப்பதாக நினைத்து ஸ்டாலின் அவரைப் பற்றி பேசுகிறார். சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். கடந்த 50 மாத ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சியை பற்றி மக்களிடம் கூறுவது தான் எங்களின் ஒரே நோக்கம்.

விடியா ஆட்சியின் குறைகளை சொல்லி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மேலும் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தை ஸ்டாலின் என்னுடைய வீட்டிற்கும் வந்தால் நானும் ஆதரிக்கிறேன் என்று கூறினார். மேலும் வீடு வீடாக சென்று திமுக கட்சியில் சேருங்கள் என்று ஆள் சேர்க்கும் அளவிற்கு பரிதாப நிலையில் இருக்கிறார்கள். இதுவே அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் என்று கூறினார்.