
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெண் செல்போன் பார்த்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அந்த பெண்ணின் தாயார் ஒரு செலோ டேப்பை எடுத்து வந்து போனோடு வைத்து அந்த பெண்ணின் முகத்தில் ஒட்டி வைத்தார்.
அந்தப் பெண் போன் மற்றும் இரு கைகளையும் சேர்த்து முகத்தில் அவர் ஒட்டிய நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலமுறை செல்போன் பார்க்காமல் சாப்பிடு என்று தாய் சொல்லியும் அந்தப் பெண் கேட்காததால் கோபத்தில் அந்த அம்மா இப்படி செய்திருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Mom of the year 😂😂 pic.twitter.com/SGOXpFT8Es
— Awesome Videos ❤️ (@Awesomevideos07) July 1, 2025