பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அந்த கட்சியை மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஆனால் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் கட்சியின் உயர் நிர்வாகிகளுக்கு பொற்கொடி புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பொற்கொடி புகார் அளித்த ஒரு வாரத்திற்குள் பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று பொத்தூரில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவரது மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் இறப்பிற்கு பிறகு கட்சியில் நிலவிய குழப்பங்களுக்கு மத்தியில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.