
தமிழகத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகம் வருவேன் எனத் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, “அறையில் இருந்து அறைகூவல் விடுகிற விஜய் போன்றவர்களை முதல்வர் எளிதாக – Left Handல் டீல் செய்யக்கூடியவர்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், மடப்புரம் இளைஞர் அஜித் மரணம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்தார் என்பதை எடுத்துக்காட்டாக கூறிய சேகர்பாபு, “மக்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ள முதல்வர் ஸ்டாலின். பரந்தூர் விவகாரம் போல அரசியல் விளையாட்டுகளுக்கு பதிலாக மக்கள் நலம்தான் எங்கள் முதல்வரின் இலக்கு” என்றும் தெரிவித்தார்.