
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்நிலையில் இந்த கூட்டத்தின் போது தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அழைப்பை தமிழக வெற்றி கழகம் நிராகரித்துள்ளது.
இந்த கூட்டத்தின் போது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி தொடர்பாக நடிகர் விஜய் முடிவு செய்வார் எனவும் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதோடு முதல்வர் வேட்பாளராக விஜயை அறிவித்துள்ளனர்.