
சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீடியோவில், மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஒரு எருமை, அருகே ஊர்ந்து செல்லும் நாகப்பாம்பை தனது நாக்கால் நக்கி, அதை விழுங்க முயற்சிக்கிறது. இந்த திகிலூட்டும் காட்சி, @mjunaid8335 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
வீடியோவில், அந்த நாகப்பாம்பு எருமைக்கு நெருங்கி வருவதும், எருமை அதை தன் நாக்கால் நக்குவதும் தெளிவாகக் காணப்படுகிறது. சில நொடிகளில், எருமை அதை வாயால் விழுங்க முயற்சிக்கிறது. ஒருவேளை பாம்பு அதை கடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, பாம்பு மரத்தின் தண்டை நோக்கி விரைந்து ஓடியது.
View this post on Instagram
இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையிலும் அருகிலிருந்த நபர் வீடியோ எடுப்பதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பலரது கோபத்தை தூண்டியுள்ளது. பல நெட்டிசன்கள், “ஓர் உயிர் போனாலும் பரவாயில்லை, வீடியோ எடுக்க முக்கியமா?” எனக் கேள்வி எழுப்பினர்.
மற்றொருவர், “வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பது இவர்களுக்கு முக்கியமல்ல, புகழ் வாங்குவதே முக்கியம் போலிருக்கிறது,” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய சமயங்களில் உயிரைக் காக்க முயல்வதற்குப் பதிலாக, வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டும் செயல்கள் குறித்து சமூகத்தில் கண்டனம் கிளம்பி வருகிறது.