சீனாவைச் சேர்ந்த 50 வயது தொழில்முனைவோர் சிஸ்டர் ஜின், தனது மகனின் வகுப்பு தோழனான 20 வயது ரஷ்ய மாணவனை காதலித்து, திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது கர்ப்பமாக இருப்பதாக அவர் Douyin (சீனாவின் TikTok போன்ற வீடியோ பிளாட்பார்ம்) மூலம் தெரிவித்துள்ளார்.

ஜின் தனது கணவரிடம் இருந்து 30-வது வயதில் விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு தனியாக தனது மகன் கைகாயை வளர்த்து வந்த அவர், ஒருநாள் மகன் வீட்டிற்கு அழைத்து வந்த நண்பர்களில் டெஃபு என்ற ரஷ்ய மாணவனை முதலில் சந்திக்கிறார். அந்த சந்திப்பிலேயே இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. ஜின் தனது சமையல் திறமையால் டெஃபுவை கவர்ந்துள்ளார். தொடக்கத்தில் வயது வித்தியாசம் காரணமாக தயக்கத்தில் இருந்த ஜின், தனது மகனின் ஆதரவுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு மகனின் ஆதரவு முக்கிய பங்காற்றியுள்ளது. “நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்கள், அதில் தவறு எதுவும் இல்லை. நான் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறேன்” என மகன் கைகாய் கூறியதாக ஜின் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, ஜின், டெஃபு மற்றும் கைகாய் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது ஜின் தனது கர்ப்பம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதைக் காண பலரும் அதிர்ச்சி மற்றும் விமர்சனத்துடன் எதிர்வினை தெரிவித்துள்ளனர். வயது வித்தியாசத்தைக் கருத்தில் கொண்டு சிலர் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், சிலர் ஜின் தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழ்ந்ததை போற்றியும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். “நான் இன்னும் இளைமையாகவே இருக்கிறேன், எனவே டெஃபுவை கவர்ந்தது தவறு இல்லை. அவர் என் மீது அன்பு காட்டுகிறார், பரிசுகள் கொடுக்கிறார், வாழ்கை முழுதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார்” என ஜின் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தற்போது சீனா மற்றும் சர்வதேச சமூக ஊடகங்களில் பரபரப்பாகி வரும் நிலையில், வயது வித்தியாசத்தை மீறி காதலையும் வாழ்க்கையையும் தேர்ந்தெடுத்த இந்த தம்பதியின் முடிவு பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.