
போதைப்பொருள் பயன்படுத்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜூலை 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வரவுள்ளது. இதேபோல நடிகர் கிருஷ்ணாவும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அவர் போதைப்பொருள் உபயோகப்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை. இதனால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என கிருஷ்ணா மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு மனுக்கள் மீதும் இன்று மாலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.