திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சின்ன அய்யங்குளம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரீத்தா (46) தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாக இருக்கும் நிலையில் இவருக்கு முருகானந்தத்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ரீத்தா அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முருகானந்தம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ரீத்தாவை கைது செய்துள்ளனர்.

இவர் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.