ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில்  சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஆர்சிபி அணியின் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிஏடி கூறியதாவது, காவல்துறையினரும் மனிதர்கள் தான் கடவுளோ, மந்திரவாதிகளோ கிடையாது.

அவர்களிடம் எந்த ஒரு மந்திர விளக்கும் கிடையாது விரலால் தேய்த்தால் உடனே விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு. ஆர்சிபி அணி நிர்வாகம் முதலில் நான்கு லட்சம் பேருக்கு மேல் வருகை தந்ததற்கு காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெறவில்லை.

அதனால் இத்தகைய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆர்சிபி தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் சமூக ஊடகங்கள் வெளியிட்ட பதிவுகளின் காரணமாகவே அந்தப் போட்டிக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்துள்ளனர்.

அந்த அதிகப்படியான கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி உள்ளனர். எனவே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கும் காவல்துறையினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல்துறையினரை ஆதரித்த தீர்ப்பாயம் மூத்த ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாரை இடைநீக்கம் செய்த அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளது.